search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் காங்கிரஸ் தேர்தல்"

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்டு 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. #congress

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்டு 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியாக ரித்திஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இன்று முதல் வருகிற ஆகஸ்டு 2-ந்தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.

    இளைஞர் காங்கிரசின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு வேட்பு மனுவோடு ரூ.7 ஆயிரத்து 500 வரைவோலையும் இணைக்கப்பட வேண்டும். பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ரூ.4 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தொகுதியளவில் தலைவர், துணைத்தலைவர், 13 செயலாளர்கள் என தொகுதிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 வரைவோலை இணைக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ரூ.ஆயிரம் வரைவோலை இணைக்க வேண்டும்.

    மாநில தலைவர் பதவிக்கு அகில இந்திய தலைமை நேர்முக தேர்வு நடத்தினர். இதில் 13 பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் போட்டியிட அகில இந்திய தலைமை அனுமதி வழங்கியுள்ளது. இதில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுபவர் தலைவராகவும், அடுத்தடுத்த 4 பேர் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர். பொதுச் செயலாளர் பதவிக்கு தனியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

    தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சித் தலைமை அனுமதி அளித்துள்ளவர்களின் பட்டியல் வருமாறு: 1.அசோக்ராஜா, 2.வசந்தராஜா, 3.லட்சுமி காந்தன், 4.ரமேஷ், 5.வேல் முருகன், 6.ஜெயராமன், 7.ரகுபதி, 8.ஜெய்னா, 9.கார்த்திக், 10.ஜெயதீபன், 11.பிரியா, 12.ஆனந்தபாபு, 13.காளிமுத்து. #congress

    ×